செய்திகள் மலேசியா
காற்று மாசுபடுத்தும் குறியீடு 180-க்கு மேல் பதிவாகும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் நாளை முதல் மூடப்படும்
புத்ராஜெயா:
காற்று மாசுபடுத்தும் குறியீடு (ஏபிஐ) 180-க்கு மேல் பதிவாகும் பகுதிகளில் உள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல் மூடப்படும்.
புகைமூட்டம் காரணமாக மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் அஸாம் அஹ்மத் தெரிவித்தார்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஏபிஐ அளவீடு 150-ஐத் தாண்டும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், வரும் திங்கட்கிழமை முதல் மூடப்படும்.
கல்வி அமைச்சிப் கீழ் பாதிக்கப்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், வீட்டிலிருந்தே கற்றல் கற்பித்தல் அமர்வுகளை செயல்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 150 முதல் 180 வரையிலான காற்று மாசுபாடு குறியீட்டு அளவுகள் நீண்ட காலமாகப் பதிவானதைத் தொடர்ந்து, புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
