நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அகதிகள் பிரச்சினை; எந்தவொரு நடவடிக்கையும் சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மியன்மார் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் ஒழுங்கான, பொறுப்பான, சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படும்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

அகதிகள் மேலாண்மைப் பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், பின்னூட்டங்களைப் பெறவும் இன்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்துடன் (சுஹாகாம்) நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதில், மியன்மார் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவது, செயல்படுத்தும் நடைமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள், அத்துடன் சுஹாகாம் கவனம் கோரிய மனிதாபிமான விஷயங்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.

அகதிகள் பிரச்சினையைக் கையாள்வதில், அனைத்துத் தரப்பினரின், குறிப்பாக மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் இருந்து வரும் கருத்துக்களை அரசாங்கம் கேட்பதற்கு இதுபோன்ற கூட்டங்கள் முக்கியமானவை என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

மேலும், கூட்டத்தில் தன்னையும் தனது தூதுக்குழுவையும் வரவேற்க முன்வந்த சுஹாகாம் தலைவர் ஹிஷாமுதீன் முகமது யூனுஸ், அவரது குழுவினருக்கு ஃபஹ்மி நன்றி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset