செய்திகள் மலேசியா
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
தலைநகர் என்பிஇ நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டுச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலிஸ் உடனடியாகவும் விரிவாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நில உரிமை அல்லது வழிபாட்டுத் தலத்தின் அமைவிடம் சார்ந்த எந்தவொரு விவகாரமும் சட்டப்பூர்வமான வழிமுறைகள், பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட முறையான நடைமுறைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டுமே தவிர, தூண்டல் நடவடிக்கைகள், வன்முறை அல்லது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயல்கள் மூலம் கையாளப்படக் கூடாது.
குறித்த ஆலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில், ஆலய நிர்வாகத்தினர் ஏற்கனவே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்முயற்சி எடுத்துள்ள நிலையில், அந்த நடைமுறைகள் சீராக முடிவடையத் தேவையான கால அவகாசமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின் முடிவில் சட்டமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பான நபர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
இத்தகைய சம்பவங்களைப் பயன்படுத்தி இன, சமய ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், சமயச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், வழிபாட்டுத் தலங்களை மதிப்பதும், சமூக அமைதியைப் பேணுவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றார்.
போலிஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அனைத்து மக்களும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பாகவும், பரஸ்பர மரியாதையுடனும், அமைதியாகவும் வாழ்வதையே விரும்புவதாகவும், பதற்றங்களை உருவாக்காமல் நீதியான முறையில் தீர்வுகாண்பதே முக்கியம் என்றும் தமது ஊடக அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
