செய்திகள் மலேசியா
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
கோலாலம்பூர்:
சிரம்பான் தீபாவளி சந்தை 2026 நெகிரி செம்பிலான் இந்தியர்களின் ஓர் அடையாளமாக மாறும்.
நெகிரி செம்பிலான் மந்திரி புசாரின் இந்தியச் சமூக விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ விஎஸ் மோகன் இதனை கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை மிகவும் விமரிசையாக நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜாலான் டத்தோ லீ போங் யீயில் இந்த தீபாவளி சந்தை அமைக்கப்படும்.
ஆனால் இம்முறை ஜாலான் டத்தோ பண்டார் துங்காலிலும் கடைகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கு ஒரு சில கண்டனங்கள் அதிருப்திகள் எழுந்தாலும் தீபாவளி சந்தை என்பது நமது பாரம்பரியமாகும்.
அதுவும் லிட்டல் இந்தியா போல் இருக்க்கும் இவ்விடத்தில் தீபாவளி சந்தையை நடத்துவது தான் நமது பாரம்பரியம். இதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
அதன் அடிப்படையில் சிரம்பான் தீபாவளி சந்தை வரும் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும்.
இக்கடைகளுக்கான விண்ணப்பப் பாரங்கள் வரும் அக்டோபர் 13, 14ஆம் தேதிகளில் மாநில மஇகா தலைமையகத்தில் விநியோகிக்கப்படும்.
கிட்டத்தட்ட 150 கடைகள் இங்கு அமைக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலும் சிரம்பான் மாநகர் மன்றம் வழங்கியுள்ளது.
ஆகவே ஆர்வமுள்ள வணிகர்கள் இக்கடைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
