செய்திகள் மலேசியா
பெர்சத்து கட்சி சொந்த சின்னத்தைப் பயன்படுத்தி மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும்; கூட்டணி ஒத்துழைப்புக்கும் தயார்: அஸ்மின்
கோலாலம்பூர்:
தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தி மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் என்பதை பெர்சத்து உறுதிப்படுத்தியுள்ளது.
தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பின் வடிவத்தைப் பற்றி விவாதித்து, அதைச் செம்மைப்படுத்தவும் கட்சி தயாராக இருப்பதாக பெர்சத்துவின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
மேலும், தேர்தலில் போட்டியிடப்படும் தொகுதிகளை பெர்சத்து விரைவில் இறுதி செய்யும்.
நேற்று பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மக்களின் நலனுக்காக, ஒரு மிதமான மற்றும் முற்போக்கான மாநில அரசாங்க நிர்வாகத்தின் நிலைத்தன்மையையும் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மலாக்கா தேர்தல ஒத்துழைப்பை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரவும், அனைவருக்கும் நேரடிப் பலன்களை வழங்கவும் பெர்சத்து வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு மலாக்கா மக்களுக்கு பெர்சத்து வேண்டுகோள் விடுக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
