செய்திகள் மலேசியா
கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாக நம்பப்படும் மாணவன் பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்தார்
கூலிம்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் 13 வயத மாணவன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர் ஷம்சுல் சின்ரிங் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் இடைவேளையின் போது நிகழ்ந்ததாகக் கூறினார்.
பள்ளியின் 'இ' பிளோக் படிக்கட்டுகளுக்கு அருகில் தரையில் மாணவர் கிடப்பதைக் கண்டதாக 48 வயது ஆசிரியர் ஒருவரிடமிருந்து போலிசாருக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
பின்னர், புகாரளித்தவர் சம்பவ இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்ட மாணவர் சுயநினைவுடனும் பேசும் நிலையிலும் இருப்பதைக் கண்டார்.
பின்னர் அவர் கூலிம் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரிடம் போலிசார் நடத்திய விசாரணையின் முடிவுகளில், கல்வி தொடர்பான மன அழுத்தத்தால் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக அவர் ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர், தனது கல்வி சாதனைகளை, அதே பள்ளியில் தற்போது நான்காம் படிவத்தில் படித்து வரும் தனது 16 வயது சகோதரியுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
