நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புருணை சுல்தான் தேசிய இருதய மருத்துவமனையில் துன் மகாதீரை சந்தித்தார்

கோலாலம்பூர்:

புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்னால் போல்கியா, தேசிய இருதய மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தச் செய்தி, இன்று டாக்டர் மகாதீரின் முகநூல் பதிவில், புருணை சுல்தான், டாக்டர் மகாதீர் ஆகியோரின் பல புகைப்படங்களுடன் பகிரப்பட்டது.

இந்தப் பகிர்வின் அடிப்படையில், இளவரசர் அப்துல் மதீன் போல்கியாவும் உடன் சென்றார்.

முன்னதாக, டாக்டர் மகாதீர் முகமது வழக்கமான சிகிச்சைக்காக தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset