நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்றத்திலிருந்து பாஸ்ப்போர்ட்டை நிரந்தரமாக விடுவிக்க ஷம்சுல் இஸ்கண்டார் அகின் விண்ணப்பம் 

கோலாலம்பூர்: 

நீதிமன்றத்திலிருந்து பாஸ்ப்போர்ட்டை நிரந்தரமாக விடுவிக்க பிரதமர் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டார் அகின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். 

ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் இந்த விண்ணப்பத்தை மேற்கொள்வதாக ஷம்சுல் இஸ்கண்டார் அகின் கூறினார். 

அவர் இந்த மாதம் பிராங்பர்ட் மற்றும் லண்டனுக்கும், அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் அயர்லாந்திற்கும், டிசம்பரில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிற்கும் பயணம் செய்ய உள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்பது, இஸ்லாமிய நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச முன்னேற்றங்களை அறிந்துகொள்ளவும், அத்துறையில் உள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடவும் தனக்கு வாய்ப்புகளை வழங்கும் என்று ஷம்சுல் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset