செய்திகள் மலேசியா
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு விவகாரத்தை ஜசெக கையாண்ட விதம், கட்சியின் அரசியல் திசையை நிறைவேற்றுவதில் அது தோல்வியடைந்ததையே பிரதிபலிக்கிறது என ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் நம்பினால், அவரும் கட்சியின் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் பி. இராமசாமி இதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என்பதல்ல முக்கியமான கேள்வி என்றும், மாறாக கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அரசியல் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இருக்கிறாரா என்பதே முக்கியம் என்றும் கூறினார்.
டத்தோஶ்ரீ நஜிப் விவகாரத்தில் ஜசெக தனது அரசியல் நிலைப்பாட்டில் தோல்வியடைந்துவிட்டது என்று லோக் உண்மையாகவே நம்பினால், கட்சியின் முடிவுகளுக்குப் பொறுப்பேற்கும் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து அவரும் முன்வந்து பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அமைச்சரவையிலிருந்து மட்டும் ராஜினாமா செய்வது, ஜசெக எதிர்கொள்ளும் ஆழமான அரசியல் சிக்கல்களைத் தீர்க்காது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
நஜிப் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கத் தொடங்கும் போதுதான் லோக்கின் ராஜினாமா நடைமுறைக்கு வரும் என்பதால், அவர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வதில் தீவிரமாக இருக்கிறாரா என்றும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 11:08 am
இடைநிலைப்பள்ளி மாணவி IRENE SOFIA கொலை: பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
October 5, 2026, 10:02 am
