நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

MYEG குழுமத்தின் கீழ் உள்ள My EG Sdn Bhd மற்றும் Zetrix AI Bhd ஆகிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 314 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசு வருவாய் வசூல் நிலுவையானது, முன்பு தெரிவிக்கப்பட்டது போல் மூன்று ஆண்டுகளுக்கானது அல்ல.

மாறாக மே முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கானது என்று போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

மே 19 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகக் கோரப்பட்ட மொத்தத் தொகையானது, அமைச்சின் கணக்கு அலுவலகத்தின் பிரதான வரவுக் கணக்கிற்கு இன்னும் மாற்றப்படாத அரசு வருவாய் வசூலை உள்ளடக்கியது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

மூன்று ஆண்டுகளாக ஏன் ஜேபிஜே,  போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் ஊடக அறிக்கைகளில் உள்ள ஒரு சிறிய திருத்தத்தை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அது உண்மையல்ல. மூன்று ஆண்டுகள் என்பது துல்லியமானதல்ல.

இந்த நிலுவை இந்த ஆண்டு மே மாதம், அதாவது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என்று அவர் இன்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset