நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய கல்வியரங்கில் MSU பல்கலைக்கழகம்  மாபெரும் சாதனை: சிறந்த 500 இடங்களுக்குள் முன்னேற்றம்

கோலாலம்பூர்–

உலகளாவியல் உயர்க்கலவி அரங்கில் மலேசியாவின் MSU பல்கலைக்கழகம் தனது வலிமையான நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' (THE) உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2027-இல் இப்பல்கலைக்கழகம் 501-550வது இடப் பிரிவுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நற்பெயரை இப்பல்கலைக்கழகம் தக்கவைத்துக் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.

கடந்த 2025ஆம் ஆண்டு 801-1,000 இடப் பிரிவில் இருந்த MSU, 2026ஆம் ஆண்டில் 601-800 இடங்களுக்கு உயர்ந்தது. தற்போது 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் 501-550 இடங்களை எட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த உலகளாவிய தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 118 நாடுகளைச் சேர்ந்த 2,297 உயர்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இத்தகைய கடுமையான போட்டி நிறைந்த சூழலில், MSU பெற்றுள்ள இந்த முன்னேற்றம் அதன் அசைக்க முடியாத பன்னாட்டுத் தரத்தையும், போட்டித் திறனையும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

மலேசிய அளவில் மதிப்பிடப்பட்ட 32 உயர்கல்வி நிறுவனங்களில் MSU ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, நாட்டின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் (IPTS) இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பன்னாட்டுப் பார்வை (International Outlook) குறியீட்டிலும் மலேசியாவில் மூன்றாவது இடத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனை மலேசிய கல்வித் துறையில் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் தேடும் மாணவர்களுக்கு MSU ஒரு சிறந்த புகலிடமாகத் திகழ்வது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset