செய்திகள் மலேசியா
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
கோலாலம்பூர்:
தேசிய அல்லது உலக அளவிலான ஆளுகையின் பின்னணியில் உரிய கவனம் செலுத்தப்படாத பொறுப்புணர்வின்மையே நாட்டின் பல பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கவனக்குறைவே மூல காரணம் என்று நான் நம்புகிறேன்.
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தன்னிச்சையாக விதிக்கப்படும் வரிகள் மற்றும் அப்பட்டமான, தொடர்ச்சியான அநீதி ஆகியவற்றை உதாரணமாக அவர் குறிப்பிட்டார்.
கசானா மெகாட்ரெண்ட்ஸ் 2026 கருத்தரங்கைத் தொடங்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் கசானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமிருல் பைசால் வான் ஜாஹிரும் கலந்து கொண்டார்.
உண்மையான அர்த்தத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முழுமையாகப் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்வதில், ஜனநாயகம் உட்பட நவீன சமூகம் தோல்வியடைந்துள்ளதாகவும் அன்வர் விமர்சித்தார்.
இதற்கிடையில் கண்காணிப்பாளர்களைக் கண்காணிப்பது என்பது கருத்தரங்கின் கருப்பொருள்களில் ஒன்று என்று அமிருல் கூறினார்.
தனது வரவேற்புரையில், அரசாங்கம், மத்திய வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட, பொதுமக்களின் சார்பாக அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர்களே இந்தக் கண்காணிப்பாளர்கள் என்று அவர் விளக்கினார்.
ஆனால், அவர்கள் பொறுப்புக்கூறுவதை நாம் எப்படி உறுதி செய்வது? என்று அவர் கேட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
October 5, 2026, 11:08 am
இடைநிலைப்பள்ளி மாணவி IRENE SOFIA கொலை: பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
October 5, 2026, 10:02 am
