நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் மாநகரில் கொள்கலனில் (Container) வாழும் இந்திய குடும்பங்கள்; கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: டத்தோ ராஜா சைமன் கேள்வி

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மாநகரில் கொள்கலனில் வாழும் இந்திய குடும்பங்கள் விவகாரத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

கூட்டரசுப் பிரதேச மஇகா தொடர்புக் டத்தோ ராஜா சைமன் இக்கேள்வியை எழுப்பினார்.

கம்போங் சிகாம்புட் பஹாகியாவில் 13 குடும்பங்கள் வசித்து வந்தனர். இவர்கள் வசித்து வந்த வீடுகள் இருந்த இடம் மேம்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டது.

இதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பலர் நஷ்டஈடு வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

ஆனால் இந்த மூன்று குடும்பங்களும் மாற்று வீடு வேண்டும் என போராடி வந்தனர்.

இதனால் மேம்பாட்டு நிறுவனம் தற்காலிகமாக அவர்களை கொள்கலனில் தங்க வைத்துள்ளது.

இக்குடும்பங்கள் கொள்கலனில் வசித்து வரும் விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதன் அடிப்படையில் மாநில மஇகா பொறுப்பாளர்களான நாங்கள் இங்கு வந்தோம்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு டிபிகேஎல் வீடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை நான் புரிந்துக் கொள்கிறேன்.

சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ தான் கூட்டரசுப் பிரதேச அமைச்சராகவும் உள்ளார்.

ஏன் அவரால் இம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்பது என்னுடைய கேள்வியாகும்.

அமைச்சர் நினைத்தால் இவர்களுக்கு வீடுகளை பெற்றுத் தரலாம். அல்லது அவர்களை தற்காலிகமாக வாடகை வீட்டில் தங்க வைக்கலாம்.

இதையெல்லாம் செய்யாமல் அமைச்சர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.

ஆக அமைச்சர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண வேண்டும். இல்லையென்றால் மஇகா அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset