செய்திகள் மலேசியா
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
கோலாலம்பூர்:
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரான லீ சீன் சுங், அவரது கெஅடிலான் கட்சி உறுப்பினர் பதவியை மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யும் முடிவைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
மக்களவை துணை சபாநாயகர், டத்தோ ரம்லி எம்டி நோர், சீன் சுங் தனது ராஜினாமா கடிதத்தை உரிய தேதியில் மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துலிடம் சமர்ப்பித்ததாகக் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத்தின் உறுப்பினர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 54(1) பிரிவின்படி, நாடாளுமன்ற இருக்கை காலியாக இருப்பது குறித்து மக்களவை சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவித்துள்ளார், என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, முன்னாள் கெஅடிலான் பிரதிநிதியான அவர், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கெஅடிலான் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
செப்டம்பர் 30 அன்று, தனது கட்சி உறுப்பினர் பதவியை மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யும் கெஅடிலானின் முடிவைப் பெற்றதாக சியான் சுங் அறிவித்தார்.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தனது குரலில் உரக்க வெளிப்படுத்தியதே இந்த இடைநீக்கத்திற்குக் காரணம் என்றும், இந்த நடவடிக்கை கட்சிக்குள் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
October 5, 2026, 11:08 am
இடைநிலைப்பள்ளி மாணவி IRENE SOFIA கொலை: பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
October 5, 2026, 10:02 am
