நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஐரீன் சோஃபியா உயிரிழப்பு: போலிஸ் தரப்பு உறுதி 

ஜொகூர் பாரு: 

ஜொகூர், யொங் பெங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவ மாணவி ஐரீன் சோஃபியா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவியின் தலையில்  ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே உயிரிழந்ததாகக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறப்பு வகுப்பு முடிந்த பின் வீடு திரும்பாத அந்த 16 வயது சிறுமியைத் தேடிய அவரது பாட்டி, பள்ளி வளாகத்தில் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் சார்பாக இருக்காமல் முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த மூன்று 16 வயது மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒரு முக்கிய சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 9-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்குக் காவல் துறையின் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset