நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்

இர்குட்ஸ்க்:

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள ஆண்டி-ப்ளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் உயிரிழந்ததை அடுத்து, அங்குள்ள 200-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து மருத்துவமனைகளில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கு பலருக்கு நுரையீரலைத் தாக்கும் pneumonic plague நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அங்கு அந்த நோய் தொடர்பான ஆய்வு நிலையத்தில் பணியாற்றிய 28 வயதுப் பெண் ஊழியர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

உயிரிழந்த ஆய்வாளர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்த சிலரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து ரஷ்யா விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல். இது மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset