செய்திகள் கலைகள்
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
ஹாலிவுட்:
உலகளவில் அதிக வசூல் செய்த படமாக அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் சாதனை படைத்துள்ளது.
உலகளவில் அதிக வசூல் செய்த படமாக 2009-ல் வெளியான அவதார் படம் 2.923 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு அடுத்ததாக 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் 2.8 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில், 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் முடிவு செய்து, அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர் என்ற பெயரில் செப். 25-ல் ரீ-ரிலீஸ் செய்தது. உலகளவில் பெரும் வரவேற்பையும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர் பெற்றது.
இந்த நிலையில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் மறுவெளியீட்டுடன் சேர்த்து ஒட்டுமொத்த வசூல் 2.925 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் அவதார் படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முறியடித்து, முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்த இரு படங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் 2.5 பில்லியன் டாலருடன் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படமும், 2.33 பில்லியன் டாலருடன் 2022-ல் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் நான்காவது இடத்திலும் உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
