நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தல்; தேசிய முன்னணி அரசியல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன: ஜாஹித்

ஷாஆலம்:

மலாக்காவில் தனது கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்யும் தருவாயில் தேசிய முன்னணி உள்ளது.

மாநில தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க அக்டோபர் 7 அன்று தேர்தல் ஆணையம் கூடி அறிவித்த பிறகு இதுபற்றி அறிவிக்கப்படும் என்றும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

தொடர்புடைய கட்சிகளுடனான' பேச்சுவார்த்தைகள் 95% நிறைவடைந்துவிட்டன

இது நம்பிக்கை கூட்டணியுடன் கூடுதலாக பாஸ் கட்சியையும் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

நாங்கள் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 

உண்மையில், அக்டோபர் 7 அன்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருப்போம். 

அதன்பிறகு, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை இறுதி செய்வதற்கோ அல்லது மலாக்கா தேர்தலில் நாங்கள் முன்னேறிச் செல்வதற்கான ஒரு வழியைக் கண்டறிவதற்கோ ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset