நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூராவ்வில் இருந்து பள்ளி மண்டபத்திற்கு ஐரீன் சோபியா இழுத்துச் செல்லப்பட்டார் என்ற கூற்றை கல்வியமைச்சு மறுத்துள்ளது

புத்ராஜெயா:

யோங் பெங்கில் உள்ள ஒரு பள்ளி மண்டபத்தில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நான்காம் படிவ மாணவி ஐரீன் சோபியா, சூராவ்வில் இருந்து சம்பவ இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார் என்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகளை கல்வியமைச்சு மறுத்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், சூராவ்வில் உடைந்த கண்ணாடி ஒன்று இருந்தது என்ற கூற்றுகளையும் அமைச்சர் டத்தோஶ்ரீ பட்லினா சிடேக் மறுத்துள்ளார்.

ஆகவே, இவை அனைத்தும் உண்மையல்ல. எதையும் பகிர்வதற்கு முன் அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இறந்துபோன ஒரு குழந்தை, துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பம் மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பல சிறு வயது மாணவர்கள் பற்றி பேசுகிறோம்.

எனவே, யூகங்களால் வேதனையை அதிகரிக்க வேண்டாம் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

நேற்று கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, ஐரீன் சோபியா சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மண்டபத்தில், சிசிடிவி வசதிகள் பொருத்தப்படவில்லை என்று பட்லினா கூறினார்.

யோங் பெங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியில் சிசிடிவி உள்ளது. ஆனால் அது குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் நிறுவப்படவில்லை.

எனவே, நாங்கள் அதை மேம்படுத்தி வருகிறோம், உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset