செய்திகள் மலேசியா
சிப்பாங் பந்தயத் தளத்தில் எப் 1 பந்தயத்தை நிரந்தரமாக நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது: பிரதமர்
சிப்பாங்:
சிப்பாங் பந்தயத் தளத்தில் எப் 1 பந்தயத்தை நிரந்தரமாக நடத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
நாங்கள் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்காலத்தில் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் பார்முலா ஒன் பந்தயங்கள் மீண்டும் வழக்கமாக நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஒரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி கேட்டபோது, பிரதமர் இவ்வாறு கூறினார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவிற்கு பார்முலா 1 பந்தயம் மீண்டும் திரும்பிய நிலையில், சிப்பாங்கில் நடைபெற்ற பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொண்ட போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்த மதிப்புமிக்க பந்தயம் கடைசியாக 2017இல் சிப்பாங்கில் நடைபெற்றது.
ஆனால், மேற்கு ஆசியாவில் நிலவிய புவிசார் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் வேறு இடத்திற்கு மாற்றப்பட யோசித்த நிலையில், சிப்பாங் அதனை முதல் இடமாகத் தேர்ந்தெடுத்ததால், இந்த சீசனில் மலேசியா மீண்டும் பார்முலா 1 பந்தயப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:00 pm
உலகளாவிய கல்வியரங்கில் MSU பல்கலைக்கழகம் மாபெரும் சாதனை: சிறந்த 500 இடங்களுக்குள் முன்னேற்றம்
October 5, 2026, 3:34 pm
பெட்டாலிங் ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாமா கட்சியில் இணைந்தார்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
ஜசெக பொதுச் செயலாளர் பதவியையும் அந்தோனி லோக் ராஜினாமா செய்ய வேண்டும்: இராமசாமி
October 5, 2026, 11:08 am
