நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடைநிலைப்பள்ளி மாணவி IRENE SOFIA கொலை: பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது 

ஜொகூர் பாரு: 

ஜொகூர், யொங் பெங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 16 வயதுடைய IRENE SOFIYA MOHD KHAIROOL FAISAL எனும் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலை செய்யப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்டனர். 

பிரேதப் பரிசோதனை செயல்முறை முடிந்த பிறகு, ஐரீன் சோஃபியாவின் உடல் மருத்துவமனையில் குளிப்பாட்டப்பட்டு, துணியால் போர்த்தப்பட்டது. பின்னர் அது காம்பங் பாரிட் செலமத்தில் உள்ள அவரது பாட்டியின் இல்லத்திற்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, நேற்று, ஐரீன் சோஃபியா வீட்டிற்குத் திரும்பாததால், மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் தனது பள்ளியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரைத் தேடி பள்ளிக்கு வந்த அவரது பாட்டியும் ஒரு நண்பரும் பாதிக்கப்பட்டவரைக் கண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 16 வயதுடைய மூன்று ஆண் மாணவர்களைக் காவல்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மூவரும், பாதிக்கப்பட்டவர் படித்த அதே பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆவர். ஐரீன் சோஃபியாவின் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடர்ந்து வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset