நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலில் நாம் தான் என்ற மிதப்பில் இருந்தால் காணாமல் போய்விடுவோம்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

அரசியலில் நாம்தான் என்ற மிதப்பில் இருந்தால் காணாமல் போய்விடுவோம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார்.

கூட்டரசுப் பிரதேச மஇகாவின் 80ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை தேசியத் தலைவர் சார்பில் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி.

மஇகா எனும் பேரியக்கம் மக்களுக்காக தொடர்ந்து போராடு ஈடு இணையற்ற ஒரு கட்சியாகும்.

பல்வேறு சவால்கள், அவதூறுகள், எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள் மஇகாவை சோதித்தாலும் மக்களுக்கான தனது கடமையில் இருந்து கட்சி ஒரு போதும் பின்வாங்கியது இல்லை.

சமுதாயத்திற்கான இந்த போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.

தற்போது அரசியல் முழுமையாக சமூக ஊடக பிரச்சாரமாக மாறி விட்டது. இந்த சவாலை எதிர்கொள்ள மஇகா தயாராக வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு தொகுதி, கிளைகளிலும் ஒரு ஊடக அதிகாரியை உருவாக்க வேண்டும்.

கட்சியின் சாதனைகளை பேசுவதுடன் நமக்கு எதிரான பொய் பிரச்சாரங்களுக்கும் அவர் அதிரடியான பதிலை தர வேண்டும்.

இது மிகவும் முக்கியம். நமக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை சகித்துக் கொள்ள முடியாது. குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசியலில் நாம் தான் என்ற மிதப்பில் இருந்தால் காணாமல் போய்விடுவோம். இதற்கு பல கட்சிகள் உதாரணமாக உள்ளன.

ஆகவே மஇகாவை தொடர்ந்து காக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக வரும் பொதுத் தேர்தலில் கூட்டரசுப் பிரதேச மஇகாவும் மீண்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

அதே வேளையில் தேர்தலை எதிர்கொள்ளவும் கூட்டரசுப் பிரதேச மஇகா தயாராக உள்ளது என்று அதன் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset