செய்திகள் மலேசியா
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
பெட்டாலிங் ஜெயா:
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் தமது பதவியை நிபந்தனையின்றி ராஜினாமா செய்துள்ளார்.
தன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த திடீர் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
கடந்த 15-வது பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
தனது நீண்ட கால அரசியல் பயணத்தில் இந்த விலகல் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூன் 12-ம் தேதி, பிகேஆர் கட்சியின் மத்திய தலைமை மன்றப் (MPP) உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
கட்சியில் 18 ஆண்டுகள் சேவையாற்றிய அவர், மத்திய மட்டத்தில் எட்டு ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்தார்.
மலேசிய அரசியல் வட்டாரங்களில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அவர் விரைவில் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:47 am
பேராக், ஶ்ரீ மஞ்சோங்கில் மட்டும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 2, 2026, 10:45 am
நடுரோட்டில் படுத்திருந்த மனநலம் குறைபாடுள்ள பெண் கார் மோதி பலி
October 2, 2026, 9:45 am
கேஎல்ஐஏ விமான நிலையம் செலாயாங் சந்தை அல்ல: சுஹாய்லி
October 2, 2026, 9:35 am
