செய்திகள் மலேசியா
துன் மகாதீர் முழுமையாக குணமடையும் வரை ஐஜேஎன் மருத்துவமனையில் தங்கியிருப்பது நல்லது: முக்ரிஸ்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முழுமையாக குணமடையும் வரை ஐஜேஎன் மருத்துவமனையில் தங்கியிருப்பது நல்லது.
அவரின் மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் இதனை கூறினார்.
70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையாக இருந்த மனைவியின் மறைவை முழுமையாக ஏற்றுக்கொள்ள துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவுக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.
தற்போது இங்குள்ள தேசிய இருதய மருத்துவமனையின் கண்காணிப்பில் இருக்கும் தனது தந்தையின் உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
வீட்டில் நிலவும் சூழல், கடந்த திங்கட்கிழமை காலமான தனது அன்பு மனைவி, மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹம்மது அலியை அவருக்கு நினைவூட்டும்.
இதனால் தற்போதைக்குத் தனது தந்தை முதலில் ஐஜேஎன்-இல் (இருப்பது நல்லது என்று முக்ரிஸ் கூறினார்.
இந்த நிலைமை தனது தந்தையின் உடல்நலத்தில் வெளிப்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:47 am
பேராக், ஶ்ரீ மஞ்சோங்கில் மட்டும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 2, 2026, 10:45 am
நடுரோட்டில் படுத்திருந்த மனநலம் குறைபாடுள்ள பெண் கார் மோதி பலி
October 2, 2026, 9:45 am
