நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பஹ்ரைன் பட்டத்து இளவரசருடன் பார்முலா 1 ஆயத்தப் பணிகள் குறித்த முன்னேற்றத்தை  டத்தோஸ்ரீ அன்வார் பகிர்ந்து கொண்டார்

சிப்பாங்:

2026 பார்முலா 1  கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரி போட்டிக்கான ஆயத்தப் பணிகள் குறித்த முன்னேற்றத்தை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பஹ்ரைன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுடன் பகிர்ந்துகொண்டார்.

சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தை ஆய்வு செய்தபோது, ​​டத்தோஸ்ரீ அன்வார் தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த முன்னேற்றத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதில் மலேசியாவுக்கும் பஹ்ரைனுக்கும் இடையே நிலவிய நெருங்கிய ஒத்துழைப்புக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை நாம் தொடர்ந்து வலுப்படுத்தும் வேளையில், அடுத்த சில நாட்களில் மலேசியாவில் பட்டத்து இளவரசரைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset