செய்திகள் மலேசியா
நடுரோட்டில் படுத்திருந்த மனநலம் குறைபாடுள்ள பெண் கார் மோதி பலி
கோலா திரெங்கானு:
மனநலம் குறைபாடுள்ள ஒரு பெண் கோலா திரெங்கானுவில் உள்ள JALAN JAMBATAN SULTAN பகுதியில் இன்று அதிகாலை நடுரோட்டில் படுத்திருந்த வேளையில் கார் மோதி அந்த பெண் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியானார்
கோலா திரெங்கானு காவல்துறை தலைவர் அஸ்ஸி நூர், இந்த சம்பவம் அதிகாலை 1.15மணிக்கு நிகழ்ந்ததாகவும் 39 வயதுடைய ஐனுன் வஹாப் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினார்.
கோங் படாக் பகுதியிலிருந்து கோலா பெராங் நோக்கி தனது புரோட்டான் வாஜா காரை ஓட்டிச் சென்ற 28 வயது ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக ரோட்டில் படுத்திருந்த பெண் மீது மோதியதாக அஸ்லி முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கார் சேதமடையவில்லை என்றும் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துக் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:47 am
பேராக், ஶ்ரீ மஞ்சோங்கில் மட்டும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 2, 2026, 9:45 am
கேஎல்ஐஏ விமான நிலையம் செலாயாங் சந்தை அல்ல: சுஹாய்லி
October 2, 2026, 9:35 am
