நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் சாத்திக்கூறுகள் மறுக்கமுடியாது 

மலாக்கா: 

மலாக்கா மாநில தேர்தலில் ஆளும் நம்பிக்கை கூட்டணி தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகள் யாவும் மறுக்க முடியாது என்று PH தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 

தேர்தலின் வெற்றி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால் இது இன்னும் திறந்த களமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஒத்துழைப்பு நல்கப்படும் என்று சொல்லப்பட்டாலும் தற்போதைய சூழலில் தேசிய முன்னணி எந்த உறுதிப்பாட்டையும் வழங்கவில்லை 

மலாக்கா மாநில தேர்தலில் தனித்து நிற்பதா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதா என்பது குறித்து முடிவு விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset