நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு 

தாப்பா: 

கடந்த செவ்வாய்கிழமை பீடோர் சென்ட்ரலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆடவர், மேலும் 9 சாட்சியாளர்களிடமிருந்து போலிஸ் வாக்குமூலம் பதிவு செய்தது 

41 வயதுடைய ஆடவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதுடன் சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக பேராக் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் அல்வி சைனால் அபிடின் கூறினார். 

சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் வாகனத்தில் இருந்த சில சாட்சியாளரிடமும் போலிஸ் வாக்குமூலங்களைப் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார் 

பாதிக்கப்பட்ட நபர் பிரபல வர்த்தகர் என்றும் அவருக்கு உணவகம் தொழிற்துறை மற்றும் இதர வர்த்தகங்கள் பீடோர், தாப்பா, சிலிம் ரிவர் பகுதிகளில் நடத்தி வருவதாக  அவர் சொன்னார் 

மேலும் கருத்து தெரிவித்த முகமது அல்வி, சந்தேக நபர் பயன்படுத்திய ஹோண்டா சிட்டி வாகனத்தில் போலிப் பதிவு எண் இருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறினார்

ஓட்டுநர் உட்பட மூன்று நபர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

சிசிடிவி அடிப்படையில் பாதிக்கப்பட்டவரின் காரின் முன் பகுதியில் வாகனத்தை நிறுத்தி இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307, 1971ஆம் ஆண்டு துப்பாக்கிகள் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset