நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ விமான நிலையம் செலாயாங் சந்தை அல்ல: சுஹாய்லி

சிப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ), செலாயாங் சந்தை போல ஆவதை நான் விரும்பவில்லை. அது அப்படி ஆக நான் அனுமதிக்க விரும்பவில்லை”.

கேஎல்ஐஏவில் உள்ள வெளிநாட்டு கும்பல் குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது சுஹாய்லி முஹம்மது ஜைன் இவ்வாறு கூறினார்.

நான் பொறுப்பேற்றிருக்கும் துறையின்  உருவாக்கம் வெறும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமல்ல.

மாறாக, நாட்டின் நுழைவாயில்களில் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதும், குற்றக் கூறுகளை எதிர்த்துப் போராடுவதுமே அதன் தெளிவான நோக்கமாகும்.

அதற்கான ஆணை எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நாட்டின் நுழைவாயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.

ஆக மொத்தத்தில் கேஎல்ஐஏ செலாயாங் சந்தை அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset