நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு

ரியாத்: 

ஹௌதி போராட்டவாதிகள் வான்வழி தாக்குதலில் சவுதி அரேபியாவின் மின்சார நிலையத்தைத் தாக்கியதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியது 

ஹௌதி போராட்டவாதிகள் இந்த தாக்குதல் என்பது ஒரு கோழைத்தனமாகும் என்று சவூதி குற்றம் சுமத்திய வேளையில் பாதிக்கப்பட்ட மின்சார நிலையத்தின் செயல்பாடுகளில் தற்காலிக தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்தது 

அந்த நிலையம் நபிகள் நாயகம் மசூதிக்கு மின்சாரம் வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்  இந்தச் சம்பவத்தை "இரு புனித மசூதிகளைக் குறிவைப்பதற்கான இந்தத் தீவிரவாதப் போராளிக் குழுக்களின் முயற்சிகளின் தொடர்ச்சி" என்று விவரித்தார்.

முன்னதாக மக்கா மீது ஹௌதி படையினர் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தது 

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ஹௌதி பயங்கரவாத படையினர் முற்றிலுமாக மறுத்தனர். 

மதீனா என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். மேலும், இது நபிகள் நாயகத்தின் மசூதியைக் கொண்டுள்ளதுடன், மக்காவுடன் சேர்த்து இஸ்லாத்தின் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset