நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை 

பிரேசிலியா: 

பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்றம் முன்பு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் பொருளானது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டு போலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உச்சநீதிமன்றத்தின் வேலியைத் தாண்டி பேருந்திலிருந்து பையை வீசிய சந்தேக நபர் ஒருவர் போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான் 

தற்போது அந்த பகுதி யாவும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது 

வெடிகுண்டாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெடிகுண்டு ஆய்வு நிபுணர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது 

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கடந்த 2024ஆம் ஆண்டு பிரேசில் உச்சநீதிமன்றம் முன்பு ஆடவர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset