செய்திகள் உலகம்
இரசாயன ஆயுதங்கள் உள்ளன என்று பொய் கூறி நுழைந்த அமெரிக்க படைகள் இராக்கிலிலிருந்து முற்றிலுமாக வெளியேறின
பக்தாத்:
இராக் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறும் பணிகள் நிறைவடைந்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறுவது குறித்து இராக், அமெரிக்க அரசுகளுக்கு இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இராக்கின் பல்வேறு நகரங்களில் களமிறக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இராக்கின் வடக்கு மாகாணமான இர்பிலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசித் துருப்புகளும் நேற்று வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
இராக்கில் ஈரான் அமெரிக்க படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகக் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்முறையாக இராக்கின் மீது படையெடுத்தன.
அங்கு ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்று அமெரிக்கா பொய் சொல்லி இத்தனை ஆண்டுகளாக தனது படை தளத்தை அங்கு அமைத்து ஏமாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
