செய்திகள் உலகம்
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ தனது அமைச்சரவையில் அதிரடியான மாற்றங்களைச் செய்து புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றிய அர்மநாத நாசிர், வெளியுறவுத்துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 14 அன்று, நாட்டின் நிதியமைச்சர் பூர்பயா யுதி சதேவா அதிரடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக துணை நிதியமைச்சராக இருந்த சுவாகாசில் நசாரா புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிதித்துறை மாற்றமானது, பொருளாதார முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறுகிய காலத்திற்குள் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தொடர் மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
