நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வர்த்தகர்களுக்கு நம்மவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வேண்டுகோள் 

கிள்ளான்: 

கிள்ளான் MADRAS MARKET தீபாவளி சந்தை செப்டம்பர் 30ஆம் தேதி  அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது

GM KLANG பேரங்காடியின் முன்புறம் MADRAS MARKET தீபாவளி சந்தை திறப்பு விழாவை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வருகை தந்து தொடக்கி வைத்தார். 

இந்த 5 நாட்கள் நடைபெறும் தீபாவளி சந்தையில் உணவு வகைகள், தீபாவளி புத்தாடைகள் மற்றும் பெருநாளுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் விற்கப்படுகின்றன. 

இந்திய வர்த்தகர்கள் தீபாவளி சந்தைகள் அமைத்து வர்த்தகத்தில் ஈடுபடுவதால் அவர்களின் பொருளாதாரம் மேமப்டைகிறது. 

இதன் காரணமாக நம்மவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்திய வர்த்தகர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, MADRAS MARKET தீபாவளி சந்தையில் போடப்பட்டிருந்த கடைகளை டாக்டர் குணராஜ் ஜார்ஜ் அவர்கள் பார்வையிட்டு வியாபாரிகளுடன் அளவலாவினார். 

இந்த தொடக்க விழாவில் GM KLANG பேரங்காடியின் தோற்றுநர் டத்தோ LIM SENG KOK, ஜோதி இம்பேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரகுநாத், கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் உறுப்பினர்கள், செந்தோசா சட்டமன்ற அணி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இன்று செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை GM KLANG-இல் MADRAS MARKET தீபாவளி சந்தை பெருவிழா நடைபெறுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset