செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ சரவணனின் சொத்து அறிவிப்பு விவகாரத்தில் எம்ஏசிசி ஆணையரின் முரண்பாடான அறிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகிறது
கோலாலம்பூர்:
முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணனின் சொத்து அறிவிப்பு விவகாரத்தில் எம்ஏசிசி தலைவரின் முரண்பாடான அறிக்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
டத்தோஸ்ரீ சரவணனும் அவரின் குடுபத்தாரும் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில்,
டத்தோஸ்ரீ சரவணன், அவரின் மனைவி, மூன்று பிள்ளைகள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்.
இது தொடர்பிலான நோட்டீஸை பெற அவர்கள் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வர வேண்டும்.
மேலும் மற்றொரு மகள் லண்டனில் இருப்பதால் அவர் நவம்பர் மாதம் வர வேண்டும் என அவர் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை டத்தோஸ்ரீ சரவணன் எம்ஏசிசி தலைமையகத்திற்கு சென்றார்.
மேலும் எனது விவகாரத்தில் ஏன் என்னுடைய 12 வயது மகனை சம்பந்தப்படுத்த வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.
அவருக்கு ஆதரவாக பல தலைவர்கள் எம்ஏசிசிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் எம்ஏசிசி தலைமை ஆணையரின் இன்றைய அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டத்தோஸ்ரீ சரவணனின் 12 வயது மகனை சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்க நாங்கள் அழைக்கவில்லை.
குறிப்பாக பார்த்துக் கொள்ள எவரும் இல்லாததால் அவர் டத்தோஸ்ரீ சரவணனுடன் வந்திருந்தார். அவ்வளவு தான் என்று அவர் கூறியிருக்கிறார்.
இப்படி டத்தோஸ்ரீ சரவணனின் சொத்து அறிவிப்பு விவகாரத்தில் எம்ஏசிசி தலைவரின் முரண்பாடான அறிக்கைகள் அதிர்ச்சியுடன் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
இதற்கு முன் பலருக்கு எம்ஏசிசி சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆனால் டத்தோஸ்ரீ சரவணன் தொடர்பான வழக்கில் மட்டும் அடுத்தடுத்து மாறுபட்ட அறிக்கைகள் வெளியாவது ஏன் என்ற கேள்விகளும் பரவலாக எழுகிறது.
இதனிடையே திங்கட்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தனது 12 வயது மகன் இருந்ததற்கான காரணத்தை அந்த ஆணையம் நியாயப்படுத்தியதை டத்தோஸ்ரீ எம். சரவணன் விமர்சித்துள்ளார்
ஒரு சிறுவனை இவ்விகாரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
குறிப்பிடத்தக்க விசாரணை அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஆணையம், 12 வயது சிறுவன் விவகாரத்தில் அடிப்படை விவேகத்தையும் பொது அறிவையும் பயன்படுத்தத் தவறியது மிகவும் வருந்தத்தக்கது.
சிறுவனை பார்த்துக் கொள்ள ‘வீட்டில் வேறு யாரும் இல்லை’. அதனால் அவர் ‘வழக்கம் போல வந்துவிட்டார்கள்’ என்று தலைமை ஆணையர் கூறுவது, பொருத்தமற்றது மட்டுமல்லாமல், விஷயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் சாடினார்.
இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் எம்ஏசிசிக்கு விசாரனைக்கு வருபவர்கள் தங்களின் பிள்ளைகளை அழைத்து வரலாமா என்ற கேள்விகளும் பரவலாக எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 3:08 pm
அரச கழகத்தை உட்படுத்திய பதிவு: நெகிரி செம்பிலான் DAP போலிஸ் புகார்
October 1, 2026, 12:48 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்; வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதிக்கவில்லை: அப்துல் ரவுஃப்
October 1, 2026, 12:20 pm
நாட்டின் 10 இடங்களில் IPU காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 1, 2026, 11:38 am
