நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மண்வாசனை தந்த பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை புகழஞ்சலி விழா; பாரதிராஜாவையும் உலகத் தமிழர்களையும் பிரிக்க முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மறைந்த இயக்குநர் சிகரம் பாரதிராஜாவையும் உலகத் தமிழர்களையும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மண்வாசனை தந்த  இயக்குநர் சிகரம் பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை புகழஞ்சலி விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

கண்ணதாசன் அறவாரியம், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியம், யாசி, மலேசிய முக்குலத்தோர் மன்றம் ஆகியவை இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்விழா வரும் அக்டோபர் 11ஆம் தேதி மாலை 3 மணிக்கு பத்துமலை ஷெங்கா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 1,000  பேர் கலந்து கொள்ளும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், நடிகர் சுப்ரிம் ஸ்டார் சரத்குமார், பிரபல மூத்த நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இயக்குநர் சிகரம் பாரதிராஜா சினிமாவை தாண்டி தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளார்.

இதனால் பாரதிராஜாவையும் மலேசிய தமிழர்கள் குறிப்பாக உலகத் தமிழர்களையும் பிரிக்க முடியாது.

இதன் அடிப்படையில் பாரதிராஜா போன்றவர்களை அங்கீகரித்து விழா எடுப்பது மலேசியத் தமிழர்களின் மரபாகும்.

இதுபோன்ற விழாக்கள் பாரதிராஜா போன்றவர்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும்.

ஆகவே வரும் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை புகழஞ்சலி விழாவில் மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன், ஏற்பட்டாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset