நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ரகளை: வோங் யான் கெவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியது 

கோலாலம்பூர்: 

கடந்த 2019ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது பதாகைகளை ஏந்தி ரகளை செய்ததாக செயற்பாட்டாளர் வோங் யன் கெவிற்கு விதிக்கப்பட்ட குற்றமும் 10,000 ரிங்கிட் அபராதமும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியது 

நீதிபதி நூரின் படாருதீன் தலைமை தாங்கிய மூவர் அடங்கிய நீதிபதி குழுவினர் வோங்கின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை நிராகரித்தனர். 

வோங் புரிந்தது குற்றதான் என்று நீதிமன்றம் உறுதிப்படுத்திய வேளையில் அரசுத் தரப்பு குற்றத்தின் அனைத்து கூறுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்றும், நீதி அமைப்பில் எந்தத் தோல்வியும் ஏற்படவில்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.

கடந்த 2025ஆம் ஆன்டு ஏப்ரல் 15ஆம் தேதி வோங் யன் கெவிற்கு உயர்நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதத்தை விதித்தது அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது 

வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதற்காக வோங் தண்டிக்கப்படவில்லை என்று தீர்ப்பை வாசித்த நீதிபதி நூரின் தெளிவுபடுத்தினார். மாறாக, சட்ட வரம்பை மீறிய அவரது குறிப்பிட்ட நடத்தைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் விளக்கமளித்தது.

கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயக சமூகத்தின் ஒரு முக்கியமான உரிமை என்றபோதிலும், அது சட்டத்தை மீறுவதற்கான உரிமை வழங்காது. குடிமக்கள் தங்களது உரிமைகளைப் பயன்படுத்தும்போது அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset