நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 10 இடங்களில் IPU காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கோலாலம்பூர்: 

இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டிலுள்ள 10 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது 

இந்த தகவலை காற்று மாசு நிர்வாக மேலாண்மை அகப்பக்கம் தெரிவித்தது 

சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா பகுதியில் காற்றின் தரம் 157ஆக பதிவாகியது.  இது நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் சற்று அதிகமான காற்று மாசுபாட்டைக் குறிக்கிறது.

ஷா ஆலாம் பகுதியில் காற்றி    தர குறியீடு 156 ஆக பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நிலாய் பகுதியில் 153 புள்ளிகளாக காற்று மாசு பதிவாகியுள்ளது.

புத்ராஜெயா மற்றும் கிள்ளான்ன் ஆகிய இரு முக்கிய பகுதிகளிலும் 
152 புள்ளிகள் பதிவாகியுள்ளன. இப்பகுதிகளில் காற்றுத் தரம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே நீடிக்கிறது.

செராஸ் பகுதியில் காற்றின் தர சுட்டெண் 151 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. செம்பாறும் மற்றும் போர்ட் டிக்சன் பகுதிகளிலும் காற்றுத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset