செய்திகள் மலேசியா
அரச கழகத்தை உட்படுத்திய பதிவு: நெகிரி செம்பிலான் DAP போலிஸ் புகார்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசவை கழகத்தையும் கட்சியையும் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று செய்யப்பட்ட நிலையில் நெகிரி செம்பிலான் மாநில DAP போலிஸ் புகார் செய்துள்ளது.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளருக்கும் DAP கட்சிக்கும் தொடர்பு உள்ளதாக அந்த சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டதாக மாநில DAP தலைவர் J. அருள்குமார் கூறினார்.
பழங்குடியின நிலம், மதம் தொடர்பான விளக்கக் கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்பு, மற்றும் தெருப் பெயர்களை மாற்றுவது உள்ளிட்ட பல விவகாரங்களுடன் டிஏபி-யை தொடர்புபடுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் மாநிலத்தின் அரசவை கழகத்தைத் தொடர்புப்படுத்தி கூறுவது என்பது எல்லையைத் தாண்டும் செயலாகும்.
அதன் காரணமாக சிரம்பான் மாவட்ட போலிஸ் நிலையத்தில் புகார் ஒன்று செய்யப்பட்டதாக அருள்குமார் செய்தியாளர் சந்திப்பில் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 12:48 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்; வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதிக்கவில்லை: அப்துல் ரவுஃப்
October 1, 2026, 12:20 pm
நாட்டின் 10 இடங்களில் IPU காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 1, 2026, 11:38 am
