நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை

டெல்அவிவ்:

துபாயிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையே சண்டை மூண்டதால் விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறங்கியிருக்கிறது.

Flydubai FZ1073 விமானம் இஸ்ரேலுக்குப் போகும் வழியில் ஜோர்தான் ஆகாயவெளியில் சவுதி அரேபியா நோக்கித் திரும்பியது.

விமானம் பொது நெருக்கடி சமிக்ஞையை அனுப்பியது. இரண்டாவது முறை சட்டவிரோதச் செயல் சமிக்ஞை அனுப்பப்பட்டது.

சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.

விமானம் கடத்தப்பட்டதாக நம்பவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் கூறியது.

சம்பவம் குறித்துத் தகவல் பெற Flydubai நிறுவனத்தை உடனடியாக அணுக முடியவில்லை.

விமானிகள் சண்டை போடத் தொடங்கியதும் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன; ஆனால் வேண்டுமென்றே அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.

சம்பவம் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு ராணுவ, ஆகாயப் படை அதிகாரிகளுடன் அவசரச் சந்திப்பை நடத்தினார். தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டார்.

தற்போது இஸ்ரேலியப் பயணிகளை பத்திரமாகத் தாயகம் கொண்டுவருவதில் முழுக் கவனமும் இருப்பதாக நெத்தன்யாஹுவின் அலுவலகம் சொன்னது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset