செய்திகள் உலகம்
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
துபாய்:
துபாயிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த விமானம், சவுதி அரேபியாவுக்கு மேலே பறந்தபோது மிக வேகமாகக் கீழிறங்கியது.
விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சம்பவம் நடந்தது.
Flightradar24 தரவுகளை BBC ஆய்வு செய்ததில் இது தெரியவந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 8.21 மணிக்கு முன்பு விமானம் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அது 17,000 அடிக்கும் அதிகமாகக் கீழிறங்கியது.
சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்திலிருந்து அவசர சமிக்ஞை அனுப்பப்பட்டது.
அதன்பிறகும் விமானத்தின் உயரத்தில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் பதிவாகின.
இறுதியில் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தை நோக்கிச் சென்றதாகக் கிடைத்த தரவுகள் காட்டுகின்றன.
விமானிகளுக்கு இடையே சண்டை மூண்டதால் விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறங்கியிருக்கிறது.
Flydubai FZ1073 விமானம் இஸ்ரேலுக்குப் போகும் வழியில் ஜோர்தான் ஆகாயவெளியில் சவுதி அரேபியா நோக்கித் திரும்பியது.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகர் முஹம்மது ஜலாலுதீன் காலமானார்
September 28, 2026, 2:04 pm
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபன் சிலையை இலங்கை போலிசார் அகற்றினர்
September 27, 2026, 8:33 pm
பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
September 26, 2026, 9:31 pm
