செய்திகள் கலைகள்
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
சென்னை:
நடிகர் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம் வெளியாகி இதுவரை 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரியின் நடிப்பில் கடந்த 10ந் தேதி வெளியான படம் மண்டாடி
இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது
இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப் போட்டியை மையமாக கொண்டுள்ளது.
சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
