செய்திகள் மலேசியா
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
12 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டப்பூர்வ அமைப்பிற்குச் சொந்தமான 16 நிலப் பகுதிகளின் உரிமையை மாற்றுவதற்கு ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பெல்டா இயக்குநர் குழுவை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
66 வயதான டத்தோ பைசௌல் அஹ்மத், தான் குற்றமற்றவர் என வாதிட்டதோடு, நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டவுடன் தன்னை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குற்றமற்றவர், விசாரணைக்கு உட்படுத்தக் கோருகிறேன்," என்று குற்றவாளிக் கூண்டில் அவர் கூறினார்.
குற்றச்சாட்டின்படி, அப்போது ஃபெல்டாவின் தலைமை இயக்குநராக இருந்த அந்த நபர், ஜூன் 3, 2014 தேதியிட்ட அதிகாரப் பத்திரம் தொடர்பான உண்மைகளை நேர்மையற்ற முறையில் மறைத்து, ஃபெல்டா இயக்குநர் குழுவை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர், ஜாலான் செமராக்கில் முன்மொழியப்பட்ட ஃபெல்டா மனை மேம்பாட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஃபெல்டாவுக்குச் சொந்தமான நிலத்தின் உரிமையை மாற்றுவதற்கு சினர்ஜி புரோமனேட் எஸ்.டி.என். பி.எச்.டி நிறுவனத்திற்கு அந்த அதிகாரப் பத்திரம் அதிகாரம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 12:22 pm
ஈஜோக்கில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: கோகிலா
September 30, 2026, 11:01 am
நாட்டின் 33 இடங்களில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 30, 2026, 10:17 am
துன் மகாதீர் சிகிச்சை, கண்காணிப்பிற்காக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
September 30, 2026, 10:16 am
அந்தோனி லோக் விவகாரம்; ஊழல்வாதிகள் பதவி விலகச் சொல்லப்பட வேண்டும்: பிரதமர்
September 30, 2026, 10:15 am
அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு சதவீத ஈபிஎப் பங்களிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்: குவான் எங்
September 30, 2026, 10:14 am
மியன்மார் அகதிகள் பிரச்சினை; பாதுகாப்பு, மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை: பிரதமர்
September 30, 2026, 10:13 am
மென்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்: பெர்ன்ஸ்டீன்
September 29, 2026, 5:35 pm
