நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்தோனி லோக் விவகாரம்; ஊழல்வாதிகள் பதவி விலகச் சொல்லப்பட வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கின் பதவி விலகல் பிரச்சினை, சில தரப்பினரின் வற்புறுத்தலின் பேரில் எழுப்பப்பட்டிருக்கக் கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்தக் காலம் முழுவதும் அமைச்சரவை அமைச்சராக அந்தோனி லோக் சிறப்பான பணித்திறனை வெளிப்படுத்தியதே இதற்குக் காரணம்.

உண்மையில், ஜசெக பொதுச் செயலாளரைப் போல ஊழல் குற்றங்களில் ஈடுபடாத ஒரு தலைவர் ஏன் பதவி விலகும்படி கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆச்சரியப்பட்டார்.

எந்தக் காரணத்திற்காக அவரை பதவி விலகச் சொன்னார்கள்? திருப்தியடையாதவர்கள், அவரை பதவி விலகச் சொன்னார்கள்.

ஊழல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அந்தோனி லோக்கின் பதவி விலகல் குறித்து விவாதிப்போம். முடிவை அவர் எடுக்கட்டும்.

அவரது பணியில் என்ன பிரச்சினை? அவரது பணி சிறப்பாக உள்ளது. ஒரு அமைச்சராக அவரது செயல்திறன் மிகவும் நன்றாக உள்ளது.

அதனால்தான் நான் அவருடன் இது குறித்து விவாதிப்பேன்  என்று இன்று இங்கு நடைபெற்ற மலேசிய தொழில்முறை தின தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset