நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு சதவீத ஈபிஎப் பங்களிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்: குவான் எங்

கோலாலம்பூர்:

இந்த நாட்டில் உள்ள மக்கள், வணிகங்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் எந்தவொரு குறைந்தபட்ச ஊதிய உயர்விலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படக்கூடாது.

முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் உள்ளூர் முதலாளிகள் அந்நியத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும்போது, ​​அவர்கள் சம்பள உயர்விலிருந்து பயனடையக்கூடாது என்று ஜசெக ஆலோசகரும் முன்னாள் நிதியமைச்சருமான லிம் குவான் எங் கூறினார்.

அதே நேரத்தில், அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு சதவீத ஊழியர் சேமநிதி (ஈபிஎப்) பங்களிப்பு, உள்ளூர் முதலாளிகளுக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகவும், அந்நியத் தொழிலாளர்களுக்குப் பயனளிக்காததாகவும் கூறப்படுவதால், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று லிம் குவான் எங் அழைப்பு விடுத்தார்.

எந்தவொரு குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்தும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பயனடைவதை விலக்குவதன் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாத்து, உள்ளூர் வணிகங்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் நேற்று இரவு முகநூல் வழியாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset