நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1,476 மியன்மார் நாட்டினர் இன்று தாமாக முன்வந்து தாயகம் திரும்பினர்

கோலாலம்பூர்:

குடியேற்றத் தடுப்பு முகாமில் உள்ள மொத்தம் 1,476 மியன்மார் நாட்டினர், இன்று தங்கள் சொந்த நாட்டிற்குத் தாமாக முன்வந்து படிப்படியாகத் தாயகம் திரும்பும் திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினர்.

மியன்மார் அரசாங்கம் ஒரு அதிகாரப்பூர்வ தூதரகக் குறிப்பின் மூலம் சமர்ப்பித்த பட்டியலின் அடிப்படையில் இந்தத் தாயகம் திரும்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சு, மலேசியக் குடிநுழைவுத் துறை,  தொடர்புடைய இலாகாகளின் ஒருங்கிணைப்புடன், மியன்மார் அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள்,  ஒரு மருத்துவக் கப்பல் மூலம் கடல் வழியாக இந்தத் தாயகம் திரும்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரசியலமைப்பின் மேன்மை,  சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குடிமை அரசாங்கத்தின் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

1951 அகதிகளின் நிலை தொடர்பான உடன்படிக்கை மற்றும் 1967 நெறிமுறையில் மலேசியா ஒரு உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், எடுக்கப்பட்ட அணுகுமுறையானது கருணை, ஆசியான் குடும்ப உணர்வு ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset