செய்திகள் மலேசியா
ஜாகர்த்தாவில் கைது செய்யப்பட்ட 5 மலேசியர்களை ஆள்சேர்ப்பு செய்த போதைப்பொருள் கும்பலை போலிஸ்கண்காணித்து வருகிறது: ஹுசைன்
கோலாலம்பூர்:
கடந்த வெள்ளிக்கிழமை ஜாகர்த்தாவில், போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐந்து மலேசியர்களை, இந்த நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆள்சேர்ப்பு செய்ததாக நம்பப்படுவதால் போலிஸ் அவர்களைக் கண்காணித்து வருகிறது.
இந்தோனேசிய போலிசார் குற்றப் புலனாய்வு முகமையின் போதைப்பொருள் குற்றப் பிரிவிலிருந்து, ஐந்து மலேசியர்களின் கைது குறித்து தனது துறைக்கு தகவல் கிடைத்தது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இதனை கூறினார்.
21 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய சந்தேக நபர்கள் அனைவரும் சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
தங்கள் காலணிகளின் உள் அடுக்கில் (இன்சோல்கள்) மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோகிராம் எட்டோமிடேட் என்ற செயற்கை போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்து இந்தோனேசிய சுங்க, கலால் அதிகாரிகள் சந்தேகம் கொண்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில், ஒவ்வொரு நபரும் எட்டோமிடேட் என சந்தேகிக்கப்படும் இரண்டு பொட்டலப் பொடிகளை வைத்திருந்ததும், ஒவ்வொரு பொட்டலமும் சுமார் 500 கிராம் எடை கொண்டதும் தெரியவந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 5:35 pm
1,476 மியன்மார் நாட்டினர் இன்று தாமாக முன்வந்து தாயகம் திரும்பினர்
September 29, 2026, 5:34 pm
நஜிப் வீட்டுக்காவலில் இருக்கும் காலம் தொடங்கும் வரை போக்குவரத்து அமைச்சராக நீடிப்பேன்: அந்தோணி லோக்
September 29, 2026, 4:52 pm
துவாங்கு முஹ்ரிஸை சந்தித்து விட்டு அரண்மனையின் பின் வாசலாக வெளியேறினார் இஸ்மாயில் லாசிம்
September 29, 2026, 3:58 pm
மலேசிய கடப்பிதழ் உலகளவில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
September 29, 2026, 3:35 pm
70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையை இழந்ததால் துன் மகாதீர் தனிமையில் வாடுகிறார்: மரினா மகாதீர்
September 29, 2026, 3:34 pm
சொத்துக்களை அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி மனு தாக்கல் செய்யவுள்ளார்
September 29, 2026, 3:34 pm
