நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மென்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்: பெர்ன்ஸ்டீன்

லண்டன்:

நிதி விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மென்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அக்கழகத்தின் முன்னாள் தலைவர் டேவிட் பெர்ன்ஸ்டீன் கூறியுள்ளார்.

2009 முதல் 2018 வரையிலான ஒன்பது சீசன் காலகட்டத்தில், 'கழகத்தின் வருவாயை அதிகரிக்கவும் செலவுகளைக் குறைக்கவும்' வர்த்தக கூட்டாளர்களுடன் 'போலி' ஒப்பந்தங்களை சிட்டி செய்திருந்தது கண்டறியப்பட்டது.
இந்தத் திட்டம் அவர்களின் உண்மையான நிதி நிலையை மறைத்ததுடன், பிரீமியர் லீக் மற்றும் யுஇஎப்ஏ நிர்ணயித்த செலவின வரம்புகளை மீறாமல் இருக்கவும் சிட்டி அணிக்கு உதவியது.

லீக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியது தொடர்பான பெரும்பாலான குற்றச்சாட்டுகளிலும் அந்த கிளப் குற்றவாளி என்று சுயாதீன ஆணையம் கண்டறிந்துள்ளது.

சிட்டி அணி தரமிறக்கப்படலாம், புள்ளிகள் குறைக்கப்படலாம் அல்லது பெரும் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.

இருப்பினும், இதுவரை எந்தத் தண்டனையும் விதிக்கப்படவில்லை. அபுதாபியின் ஆதரவுடன், சிட்டி அணி இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளது.

ஆனால், 1998 முதல் 2003 வரை சிட்டியின் தலைவராக இருந்த பெர்ன்ஸ்டைன், எதிஹாட் ஸ்டேடியம் கிளப் கடுமையான தண்டனைக்குத் தகுதியானது என்று நம்புகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset