நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியன்மார் அகதிகள் பிரச்சினை; பாதுகாப்பு, மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை: பிரதமர்

கோலாலம்பூர்:

மியன்மார் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள், மலேசியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும்.


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அகதிகளைத் தாமாக முன்வந்து படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்காக மியான்மருடன் ஒத்துழைப்பது உட்பட, இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த உறுதிப்பாடே அடித்தளம்.

சட்ட அமலாக்கம், முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, அகதிகள் வந்த நாட்டுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் மேலும் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மியன்மார் அகதிகள் பிரச்சினை ஒரு புதிய பிரச்சினை அல்ல.

மாறாக, இது பல தசாப்தங்களாக நாட்டின் மீது பாதுகாப்பு, சமூக மற்றும் நிர்வாகக் கண்ணோட்டத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகும்.

மலேசியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, சட்டம் மற்றும் மனித விழுமியங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் முழுமையாகக் கையாளப்படுவதை நான் உறுதி செய்வேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset