நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார் 

ரபாத்: 

வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய நாடான மொராக்கோவில் முதல்முறையாக பெண் ஒருவர் நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளார். 

அவ்வகையில் நாட்டின் புதிய பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார் 

செப்டம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்  எல் மன்சோரி தலைமையிலான Authenticity and Modernity (PAM) கட்சி 97 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து, ரபாத்தில் உள்ள அரச மாளிகையில் மன்னர் ஆறாம் முகமது அவர்களை நேரில் சந்தித்து எல் மன்சூரி புதிய அரசாங்கத்தை அமைக்கப் பொறுப்பேற்றார்.

தமது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம் நாட்டுப் பெண்கள் அனைவருக்குமான பெருமைமிக்க தருணம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல அரசியல் கட்சிகளுடன் உடனடியாகக் கலந்தாலோசனை நடத்தி புதிய அமைச்சரவையை உருவாக்கும் பணிகளைத் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset